3–ந் தேதி நடைபெற உள்ள கருணாநிதி வைர விழாவில் தி.மு.க.வினர் பங்கேற்க வேண்டும்
சென்னையில் 3–ந் தேதி நடைபெற உள்ள கருணாநிதி வைர விழாவில் தி.மு.க.வினர் பங்கேற்க வேண்டும் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அறிக்கை
நாகர்கோவில்,
நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேல் செயலாற்றி வருபவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவர் ஏறத்தாழ 50 ஆண்டு காலமாக தமிழக அரசியலின் ஆணி வேராக நிலைத்து, அச்சாணியாக செயல்படுபவர். தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் பயன் விளைவிக்கும் மகத்தான திட்டங்களை செயல்படுத்திய தலைசிறந்த ஆட்சி நிர்வாகி, கலைஞர் கருணாநிதி என்னும் மாபெரும் தலைவரை தவிர்த்து விட்டு, எதிர்காலத்தில் எவராலும் தமிழகத்தின் வரலாற்றை எழுதிவிட முடியாது.
இப்படி பல பெருமைகள் கொண்ட தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்த நாளில் (வருகிற 3–ந் தேதி) கூடுதல் சிறப்பாக சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா ஆண்டும் இணைந்து நம்மை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மகிழ்ச்சி விழாவில் நாமும் பங்கேற்க வேண்டும். எனவே ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த வைரவிழாவில் விழா நாயகரை வாழ்த்த சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு வரவேண்டும் என்று குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக த.மா.கா. கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் ரெகு உள்ளிட்ட மாற்று கட்சியினர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அருகில் நகர செயலாளர் வக்கீல் மகேஷ், இளைஞரணி மாவட்ட செயலாளர் சிவராஜ், சேக்தாவூது மற்றும் பலர் உள்ளனர்.

Related Tags :
Next Story