தென்காசியில் வெறி நாய்கள் கடித்து 4 ஆடுகள் செத்தன
தென்காசியில் வெறி நாய்கள் கடித்து 4 ஆடுகள் பரிதாபமாக செத்தன.
தென்காசி,
தென்காசியில் வெறி நாய்கள் கடித்து 4 ஆடுகள் பரிதாபமாக செத்தன.
4 ஆடுகள் செத்தனதென்காசி மதினா நகர் பாறையடி 2–ம் தெருவை சேர்ந்தவர் செய்யது அலி (வயது 40). விவசாயி. இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் உள்ள தொழுவத்தில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு ஆடு, மாடுகளை கட்டிப் போட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை செய்யது அலி எழுந்து பார்த்தபோது தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகளில் 4 ஆடுகள் கடிபட்ட காயங்களுடன் செத்து கிடந்தன. மேலும் 2 ஆடுகள் காயங்களுடன் கிடந்தன. இதனால் செய்யது அலி அதிர்ச்சி அடைந்தார். காயமடைந்த ஆடுகளுக்கு கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வெறிநாய்கள்ஆடுகளை பரிசோதித்த கால்நடை டாக்டர்கள் அவற்றை வெறிநாய்கள் கடித்து இருப்பதாக கூறினர். நள்ளிரவில் அந்த பகுதியில் சுற்றித்திரியும் 10–க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் தொழுவத்தில் புகுந்து அந்த ஆடுகளை கடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 10–வது வார்டு பகுதியில் இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகளை தின்பதற்கு வெறிநாய்கள் அங்கு வருகின்றன. இந்த நாய்கள் தான் ஆடுகளை கடித்துக் கொன்று உள்ளன. எனவே வெறிநாய்களை பிடிக்க நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.