இறைச்சிக்காக மாடுகளை விற்கும் தடையை கண்டித்து ரெயில் மறியலுக்கு முயன்ற மனித நேய ஜனநாயக கட்சியினர் கைது


இறைச்சிக்காக மாடுகளை விற்கும் தடையை கண்டித்து ரெயில் மறியலுக்கு முயன்ற மனித நேய ஜனநாயக கட்சியினர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2017 3:45 AM IST (Updated: 1 Jun 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

இறைச்சிக்காக மாடுகளை விற்கும் தடையை கண்டித்து ரெயில் மறியலுக்கு முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினர் 40 பேர் கைது

ஈரோடு,

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.‌ஷபிக்அலி தலைமையில் கட்சியினர் பலர் நேற்று மாலை ஈரோடு காளைமாட்டுச்சிலை பகுதியில் திரண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பியபடி ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். ரெயில் நிலையத்தின் முன்பு வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவர்களிடம் ரெயில் மறியலுக்கு அனுமதி கிடையாததால் கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினார்கள். ஆனால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். இதில் மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டு மரப்பாலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


Next Story