மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பசுமாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக வெட்டுவதற்கு தடைவிதித்துள்ள மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பசுமாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக வெட்டுவதற்கு தடைவிதித்துள்ள மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகம்மது ரபீக் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் ஹசன் இமாம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் அருள், மாவட்ட செயலாளர் அப்துல்கனி, செயற்குழு உறுப்பினர் முகம்மது பாருக் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
Related Tags :
Next Story