வாய், கண்களில் கருப்பு துணி கட்டிய சிறுவர்களிடம் பொதுமக்கள் மனு கொடுத்து போராட்டம்
நெடுவாசலில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்றது. அப்போது வாய், கண்களில் கருப்பு துணி கட்டிய சிறுவர்களிடம் மனு அளித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகாடு,
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் 2-வது கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
50-வது நாளாக போராட்டம்
இந்தநிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 50-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் போராடிவரும் மக்களை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கும் விதமாக, வாய், கண்களில் கருப்பு துணி கட்டிய சிறுவர்களை மத்திய, மாநில அரசுகளாக சித்தரித்து அவர்களிடம் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story