பெண் தற்கொலை வழக்கில் கணவர், மாமியார் உள்பட 3 பேர் கைது


பெண் தற்கொலை வழக்கில் கணவர், மாமியார் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2017 3:30 AM IST (Updated: 1 Jun 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

பெண் தற்கொலை வழக்கில் கணவர், மாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

சென்னை அனகாபுத்தூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் திருமழிசை அருகே உள்ள பிரயாம்பத்து ஜவகர்நகரை சேர்ந்த நாகலட்சு மி(24) என்பவருக்கும் கடந்த 2011–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினையால் தகராறு இருந்து வந்தது.

அதை தொடர்ந்து கடந்த 28–ந்தேதியன்று நாகலட்சுமி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

3 பேர் கைது

இது குறித்து வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் நாகலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் வெங்கடேசன், மாமியார் விஜயா (50) உறவினர் கனகராஜ் (47) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story