ஜமாபந்தி நிறைவு விழா: 733 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
சேத்துப்பட்டில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 733 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணி வழங்கினார்.
சேத்துப்பட்டு,
சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்தது. ஜமாபந்தியின்போது பல்வேறு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளருமான சுப்பிரமணி பெற்று கொண்டார். ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது.
மண்டல துணை தாசில்தார் ஆர்.மனோகரன், வருவாய் ஆய்வாளர்கள் சிவலிங்கம், அமுல்ராஜ், முருகன், காயத்திரி, நில அளவர் பவன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேத்துப்பட்டு தாசில்தார் வ.சாந்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கே.வி.சேகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணி, கே.வி.சேகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் 733 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நத்தம் வீட்டுமனை பட்டா, மின்இணைப்பு சான்று, வாரிசு சான்று, வீட்டுமனை பட்டா, வேளாண் பொருட்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினர்.
விழாவில் பெரணமல்லூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் செல்வராஜ், கிராம உதவியாளர் சங்க செயலாளர் டேவிட், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் முருகானந்தம், வருவாய் ஆய்வாளர்கள் சங்க பொறுப்பாளர் பாக்கியலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமையிடத்து துணை தாசில்தார் ஆனந்தராஜன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story