அதிராம்பட்டினத்தில் லாரி-பஸ் மோதல்; 10 பேர் படுகாயம்


அதிராம்பட்டினத்தில் லாரி-பஸ் மோதல்; 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 1 Jun 2017 3:45 AM IST (Updated: 1 Jun 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினத்தில் லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக முத்துப்பேட்டைக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிராம்பட்டினம் சேர்மன் வாடி அருகே சென்றபோது எதிரே அதிராம்பட்டினத்தில் இருந்து வந்த லாரி, பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகே இருந்த இரும்பு கடை மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் சந்தானராஜ், லாரி டிரைவர் செல்வம், பஸ் பயணிகள் 8 பேர் என மொத்தம் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

மருத்துவமனையில் அனுமதி

இவர்கள் உடனடியாக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story