தீ விபத்தில் 2 வீடுகள் நாசம் ரூ.6 லட்சம் பொருட்கள் சேதம்


தீ விபத்தில் 2 வீடுகள் நாசம் ரூ.6 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 1 Jun 2017 4:30 AM IST (Updated: 1 Jun 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே நடந்த தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து நாசமாயின. இதில் ரூ.6 லட்சம் மதிப்புடைய பொருட்கள் சேதம் அடைந்தன.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள சேந்தமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது53). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அனுசுயா தனது மகளுடன் சேந்தமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அனுசுயாவின் கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ அருகே இருந்த மாட்டு கொட்டகைக்கும் மளமளவென பரவியது.

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

மின் கசிவு

இந்த விபத்தில் வீடு மற்றும் மாட்டு கொட்டகை முற்றிலும் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.12 ஆயிரம் ரொக்கம், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புடைய பொருட்கள் சேதம் அடைந்தன. கூடுதல் மின்னழுத்தம் காரணமாக குளிர்சாதன பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல அதே ஊரை சேர்ந்த ஆற்றங்கரை தெருவில் வசிக்கும் ஜெயராமன் என்பவருடைய கூரை வீடும் தீ விபத்தில் நாசமானது. இதில் ரூ.1 லட்சம் மதிப்புடைய பொருட்கள் சேதம் அடைந்தன.


Related Tags :
Next Story