அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அரசு மருத்துவமனை உள்ளது. திருத்துறைப்பண்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு தான் சிகிச்சை பெற வரவேண்டும். ஆனால் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தலைமை மருத்துவர், பொது அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமிக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், கட்சியின் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் எம்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story