சேலம்-மதுரை செல்லும் பஸ்கள் அரவக்குறிச்சி பகுதிக்கு வந்து செல்ல வேண்டும்
சேலம்-மதுரை செல்லும் பஸ்கள் அரவக்குறிச்சி பகுதிக்கு வந்து செல்ல வேண்டும் என்று சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கரூர்,
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சூர்யபிரகாஷ் தலைமையில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட கரூர்- அரவக்குறிச்சி கரடிப்பட்டி பிரிவு முதல் அரவக்குறிச்சி-சின்னதாராபுரம் சாலையை இணைக்கும் தார்சாலையை சீரமைத்து தர முடிவு செய்யப்பட்டன. கரூர்-திருச்சி மெயின் ரோட்டில் குறப்பாளையம் புறவழிச்சாலை மூலம் முசிறி மற்றும் மணப்பாறை செல்லும் வாகனங்களுக்காக எல்.ஆர்.எஸ். பாலத்தில் அகற்றப்பட்ட வேகத்தடையை அமைத்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டன.
பஸ்கள்
அரவக்குறிச்சி வட்டம் பாலமலை கோவிலுக்கு செல்லும் வழியில் மேட்டுக்கடை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கரூர் ஜவகர் பஜாரில் கட்டப்பட்டுள்ள நடைமேடையில் உள்ள கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பை அகற்றவும் முடிவு செய்யப்பட்டன. காந்திகிராமம் இ.பி. காலனி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் - மதுரை வழி திண்டுக்கல் செல்லும் குறிப்பிட்ட கோட்டத்தை சேர்ந்த 23 பஸ்கள் புறவழி சாலை வழியாக செல்லாமல் அரவக்குறிச்சி பகுதிக்குள் வந்து செல்ல வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன
கட்டுமான கம்பிகள்
கரூர் ஜவஹர் பஜார் சாலையிலிருந்து பிரதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நுழைவு சாலையில், சாலை பணிகள் நிறைவு பெறாததால் கட்டுமான கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதால் அந்த பாதையை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் தன்னார்வ அமைப்பை சேர்ந்த கோபால், சொக்கலிங்கம் மற்றும் நெடுஞ்சாலை, போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story