மூளைச்சாவு அடைந்த வங்கி பெண் ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது
மூளைச்சாவு அடைந்த வங்கி பெண் ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
மும்பை,
மூளைச்சாவு அடைந்த வங்கி பெண் ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
மூளைச்சாவுமும்பை முல்லுண்டை சேர்ந்தவர் சினாகா எவ்லேக்கர்(வயது55). வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று பணியில் இருந்த போது திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்.
டாக்டர்கள் பரிசோதனையில் சினேகா எவ்லேக்கர் மூளைச்சாவு அடைந்து விட்டது தெரியவந்தது. இதுபற்றி டாக்டர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
4 பேருக்கு மறுவாழ்வுஅவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். இதையடுத்து சினேகா எவ்லேக்கர் முல்லுண்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலில் இருந்து இருதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவற்றை அகற்றினார்கள்.
பின்னர் சினேகா எவ்லேக்கரின் இருதயம் அங்கு இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சதாராவை சேர்ந்த 37 வயது நபருக்கும், ஒரு சிறுநீரகம் தானேயை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும், கல்லீரல் கொல்கத்தாவை சேர்ந்த 60 வயது பெண்ணுக்கும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
சினேகா எவ்லேக்கரின் இன்னொரு சிறுநீரகம் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
வங்கி ஊழியரின் உடல் உறுப்பு தானத்தில் மூலம் மேற்படி 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது.