மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு இலக்கு கலெக்டர் விவேகானந்தன் தகவல்


மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு இலக்கு கலெக்டர் விவேகானந்தன் தகவல்
x
தினத்தந்தி 1 Jun 2017 4:23 AM IST (Updated: 1 Jun 2017 4:23 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 8,150 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.404 கோடி கடன் வழங்க வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட வங்கியாளர்கள் குழுக்கூட்டம் தர்மபுரி மாவட்ட தொழில்மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி பொதுமேலாளர் விஜயகுமார், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:–

தர்மபுரி மாவட்டத்தில் ஸ்டேண் டப் இந்தியா திட்டத்தின் மூலம் 25 பேருக்கும், டிகிதன் யோஜனா மூலம் 519 பேருக்கும் வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் பல்வேறு திட்டங்கள் மூலம் மானிய கடனுதவிகள் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகின்றன.

ரூ.404 கோடி கடனுதவி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 8,150 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2017–2018–ம் நிதியாண்டில் ரூ.404 கோடி வங்கிக்கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த இலக்கை அடையும் வகையில் வங்கிகள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் விவேகானந்தன் பேசினார்.

இந்த கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் குப்புசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுசீலா, மகளிர் திட்ட அலுவலர் ஆர்த்தி, நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் பார்த்தசாரதி, இந்தியன் வங்கி மாவட்ட முதன்மை மேலாளர் முத்தரசன், மாவட்ட தாட்கோ மேலாளர் வைத்தியநாதன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Next Story