திட்டக்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் சாவு மற்றொரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை


திட்டக்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் சாவு மற்றொரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 1 Jun 2017 4:45 AM IST (Updated: 1 Jun 2017 4:45 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் விழுந்த மற்றொரு பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திட்டக்குடி,

திட்டக்குடி அடுத்த எடைச்செருவாய் காலனியை சேர்ந்தவர் சின்னதம்பி மகள் ராதா(வயது 15). அதே பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகள் பானுப்பிரியா(19). இவர்கள் 2 பேரும் தோழிகள்.

இந்த நிலையில், நேற்று மதியம் ராதாவும், பானுப்பிரியாவும் அதே பகுதியில் உள்ள ராமு என்பவர் நிலத்தில் இருந்த தரைக்கிணற்று சென்று துணி துவைத்துக் கொண்டிருந்தனர். பின்னர், அவர்கள் அங்கேயே குளித்தனர். இவரும் தோழிகள் என்பதால் விளையாடிக் கொண்டே கிணற்றின் அருகே அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென தவறி 2 பேரும் கிணற்றுக்குள் விழுந்ததாக தெரிகிறது.

இளம்பெண் சாவு

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக இறங்கினர்.

அப்போது, கிணற்றில் இருந்த தண்ணீரில் மூழ்கி இறந்த ராதாவின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பானுப்பிரியாவையும் அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்–இன்ஸ்பெக்டர் வேம்பு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குளிக்க சென்ற இடத்தில் தவறி விழுந்து இளம்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story