கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் டிரைவர்கள் கைது
கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக லாரிகளின் டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
செங்கோட்டை,

கழிவுகள் ஏற்றி வந்த லாரிகள்
நெல்லை மாவட்டம் புளியரை வழியாக கேரளாவுக்கு தினமும் சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கடந்த சில மாதங்களாக கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வந்த லாரிகள் தமிழகத்திற்கு வருவது தடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் கேரளாவில் இருந்து 2 லாரிகள் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடி பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது, அந்த லாரிகளில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதை அறிந்த சோதனை சாவடியில் இருந்த போலீசார் 2 லாரிகளையும் மடக்கி பிடித்து சோதனை நடத்தினார்கள்.
அப்போது, அதில் மீன், இறைச்சி கழிவுகள் ஏற்றி வந்ததும், அதை தமிழகத்தில் கொட்ட வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 லாரிகளையும் கேரளாவை நோக்கி திருப்பி அனுப்பினார்கள். ஆனால் லாரிகளை டிரைவர்கள், அங்கு இருந்து எடுத்து சென்று ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எஸ் வளைவு பகுதியில் நிறுத்தி விட்டனர்.
டிரைவர்கள் கைது
இதுகுறித்து உடனடியாக செங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரதாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் கடையநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 28), தேவேந்திரன் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, லாரிகளை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story