மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் வெட்டி படுகொலை பழிக்கு பழியாக தீர்த்துக்கட்டிய கும்பல்
திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களை காரில் வந்த மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். பழிக்கு பழியாக தீர்த்துக்கட்டிய இந்த கும்பல் காரில் தப்பி சென்றது.
திருச்சி,
தஞ்சை மாவட்டம் திருச்சனம்பூண்டியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 35). தஞ்சை மாவட்டம் பூண்டி மாதாகோவில்தெருவை சேர்ந்தவர் வின்சென்ட்(37). நண்பர்களாகிய இவர்கள் இருவரும் திருச்சி உறையூர் பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் இருந்து திருச்சிக்கு வந்தனர். இவர்களுடன் மேலும் 2 நண்பர்களும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
திருமண நிகழ்ச்சியை முடித்து கொண்டு அவர்கள் நேற்று மாலை 4 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் மீண்டும் தஞ்சைக்கு புறப்பட்டு சென்றனர். இவர்களது நண்பர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் முன்னால் சென்றனர். செந்தில்குமாரும், வின்சென்ட்டும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவர்கள் பின்னால் சென்று கொண்டு இருந்தனர். திருச்சி சிந்தாமணி வழியாக ஓயாமரி சுடுகாடு அருகே ரோட்டில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று திடீரென அவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
2 வாலிபர்கள் வெட்டி படுகொலை
இதில் செந்தில்குமாரும், வின்சென்ட்டும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினர். இதில் செந்தில்குமாரை வெட்டி அருகே இருந்த காவிரி ஆற்று முட்புதரில் வீசினர். அந்த கும்பலிடம் இருந்து தப்ப முயன்ற வின்சென்ட்டை விரட்டி சென்று சாலையின் நடுவே வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றது. இந்த படுகொலை சம்பவத்தை கண்ட அந்த பகுதியினர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே செந்தில்குமார், வின்சென்ட் ஆகியோருக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த அவர்களது நண்பர்கள் பின்னால் வந்த இருவரையும் காணவில்லையே என தேடி வந்தனர். அப்போது அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இந்த சம்பவம் பற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசபெருமாள், இன்ஸ்பெக்டர் சீதாராமன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் அங்கு கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்று முட்புதரில் வீசப்பட்டு கிடந்த செந்தில்குமாரின் உடலையும், சாலையின் நடுவே கொலை செய்யப்பட்டு கிடந்த வின்சென்ட்டின் உடலையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ரவுடி கொலைக்கு பழிக்குப்பழி
சம்பவ இடத்துக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண், போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் ஆகியோர் வந்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில், கடந்த 2015-ம் ஆண்டு நடந்த ஒரு கொலைக்கு பழிக்கு பழியாக இந்த இரட்டை கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது.
அதுபற்றிய விபரம் வருமாறு:-
தஞ்சை மாவட்டம் திருச்சனம்பூண்டியை சேர்ந்தவர் பஞ்சாபி என்கிற பஞ்சாபிகேசன்(45). பிரபல ரவுடியான இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி திருக்காட்டுப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் உள்ள தனது மருந்துகடை அருகே நின்று கொண்டு இருந்தபோது, அங்கு 2 கார்களில் வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மணல் குவாரி தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் ரவுடி பஞ்சாபிகேசனை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
கொலைவழக்கில் தொடர்பு
அப்போது இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதே ஊரை சேர்ந்த செந்தில்குமார், பாலமுருகன், பூண்டியை சேர்ந்த வின்சென்ட், பாஸ்கரன், திருச்சியை சேர்ந்த ராஜா, திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த ரவிச்சந்திரன் உள்பட 7 பேர் சில நாட்களில் முதுகுளத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இந்நிலையில் தற்போது திருச்சி ஓயாமரி சுடுகாடு ரோட்டில் கொலை செய்யப்பட்ட செந்தில்குமார், வின்சென்ட் ஆகிய இருவரும் ஏற்கனவே பஞ்சாபிகேசன் கொலை வழக்கு தொடர்பாக கோர்ட்டில் சரண் அடைந்தவர்கள் ஆவார்கள்.
மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
பஞ்சாபிகேசன் கொலைக்கு பழி தீர்க்கும் நோக்கில் திருச்சியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த செந்தில்குமார், வின்சென்ட்டை நோட்டமிட்ட மர்ம கும்பல் காரில் பின்தொடர்ந்து வந்து அவர்களை வெட்டி சாய்த்து இருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரில் வந்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story