பெண் என்ஜினீயரிடம் ரூ.15 ஆயிரம் திருட்டு
சோழிங்கநல்லூரை அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்பவர் வனிதா (வயது 24).
சோழிங்கநல்லூர்,
என்ஜினீயரான இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி தினந்தோறும் வேலைக்கு செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் வழக்கம்போல வேலைக்கு சென்ற அவர் வேலை முடிந்து இரவு 8 மணியளவில் அங்குள்ள ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுத்துக்கொண்டு பஸ்சில் சோழிங்கநல்லூரில் தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே வந்தபோது தன்னிடம் இருந்த பையை பார்த்தார். பை கத்தரிக்கப்பட்டு இருந்தது.
பையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது. இதையடுத்து வனிதா சத்தம் போடவே பஸ் செம்மஞ்சேரி போலீஸ்நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. பின்னர் வனிதா இது குறித்து செம்மஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story