விருத்தாசலத்தில் மத்திய அரசை கண்டித்து மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம்


விருத்தாசலத்தில் மத்திய அரசை கண்டித்து மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2017 4:00 AM IST (Updated: 2 Jun 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் மத்திய அரசை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு எதிராக, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்திலும் இதற்காக மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளது. மாட்டு இறைச்சியை சாப்பிட்டும் நூதன போராட்டங்கள் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் மாட்டு இறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து விருத்தாசலம் பஸ் நிலையம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

போராட்டம்

அதன்படி நேற்று காலை மக்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமையில் அக்கட்சியினர் விருத்தாசலம் பஸ் நிலையம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் தாங்கள் சமைத்து கொண்டு வந்திருந்த மாட்டு இறைச்சியை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.

இதையடுத்து மாட்டு இறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு தாங்கள் கொண்டு வந்திருந்த மாட்டு இறைச்சியை மக்கள் அதிகாரம் அமைப்பினர் சாப்பிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வக்கீல் புஷ்பதேவன், செந்தாமரைகந்தன், கதிர், பார்வதி, சசிகலா, வெங்கடேசன், அன்பழகன், குமரன், சுகதேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story