மதுக்கடையை மூடக்கோரி போராடிய கிராம மக்கள் மீது போலீஸ் தடியடி
கோட்டூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி போராடிய கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே தேவதானம் ஊராட்சி ஒட்டங்காடு கிராமத்தில் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடையை மூடக்கோரி தேவதானம், செந்தாமரைக்கண், ஒட்டங்காடு, மணல்படுகை, காலைக்காரன்வெளி, புத்தகன்கோட்டகம், தோளி ஆகிய 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த மாதம் (மே) 13-ந் தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் மே மாதம் 30-ந் தேதிக்குள் மதுக்கடையை மூடிவிடுவோம் என உறுதி அளித்தனர். அதன்பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் உறுதி அளித்தபடி அதிகாரிகள் மதுக்கடையை மூடவில்லை. அங்கு மதுக்கடை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் ஒன்று திரண்டு நேற்று மீண்டும் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மதுக்கடை மீது கல் வீசி, கடையை உடைக்க முயற்சி செய்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், பெருகவாழ்ந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது தடியடி நடத்தினர். இதில் விஜயகுமார் (வயது38), ராணி (40), முனியம்மாள் (70) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
150 பேர் கைது
போலீசார் தடியடி நடத்திய பின்னரும் கிராம மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் (35), பா.ஜனதா ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செல்வம் (28) மற்றும் 65 பெண்கள் உள்பட 150 பேரை பெருகவாழ்ந்தான் போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

Related Tags :
Next Story