மதுபானக்கடையை அகற்றக்கோரி 3-வது முறையாக பொதுமக்கள் போராட்டம்
குளித்தலை ரெயில் நிலையம் அருகே உள்ள மதுபானக்கடையை அகற்றக்கோரி 3-வது முறையாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை,
குளித்தலை ரெயில் நிலையம் அருகே உள்ள மதுபானக்கடையில் மதுபானம் வாங்க வருபவர்களில் சிலர் இப்பகுதியில் உள்ள வீடுகளின் திண்ணைகளிலும், வீட்டு வாசலிலும் உட்கார்ந்து மது அருந்துகின்றனர். சிலர் மதுபாட்டில்களை வீட்டின் முன்பு உடைத்துவிட்டு சென்று விடுகின்றனர். மேலும், இங்குள்ள பாரில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் குடிமகன்கள் அதிகாலையிலேயே மது அருந்திவிட்டு தகராறு செய்துகொள்வதால் இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இங்குள்ள மதுபானக்கடையை அகற்றவேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கடந்த மாதம் 7-ந் தேதி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
பின்னர் கடந்த மாதம் 9-ந் தேதி மதுபானக்கடை மற்றும் பாரை அகற்றவேண்டுமென கூறி மதுபானக்கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை வட்டாட்சியர் அருள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மது அருந்தும் பார் நிரந்தரமாக மூடப்படும். ஒரு மாத காலத்திற்குள் ரெயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடை வேறு இடத்திற்கு மாற்றப்படுமென உறுதியளித்தார். இதையடுத்து இந்த மாத இறுதிக்குள் இக்கடையைஅகற்றாவிட்டால் ஜூன் 1-ந் தேதி (நேற்று) இக்கடைக்கு பூட்டு போடப்படும் என்று பொதுமக்கள் கூறிவிட்டு கலைந்து சென்றனர்.
முற்றுகை
இந்த நிலையில் அதிகாரிகளுக்கு நினைவூட்டும் வகையில், இந்த மதுபானக்கடையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றாவிட்டால் நேற்று மாபெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக 16, 21-வது வார்டு பொதுமக்கள் சார்பில் கடந்த மாதம் 30-ந் தேதி பதாகை ஒன்று ரெயில் நிலையம் அருகே உள்ள மதுபானக்கடை முன்பு வைத்தனர். அதன்படி நேற்று பகல் 12 மணி அளவில் மதுபானக்கடையை திறக்க ஊழியர்கள் கடைக்கு வந்தனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கடை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உறுதி
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர் பரமேஸ்வரன், குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமோகன், வருவாய்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், வருகிற 16-ந் தேதிக்குள் குளித்தலை ரெயில் நிலையம் அருகே உள்ள மதுபானக்கடை அகற்றப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேற் கண்ட மதுபானக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் 3-வது முறையாக போராட் டத்தில் ஈடு பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story