டாஸ்மாக் கடையை மூடக்கோரி தரையில் அமர்ந்து கிராமமக்கள் போராட்டம்
திருமயம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி தரையில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
திருமயம்,
திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டி ஊராட்சி மன்றம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த கடையை அங்கிருந்து அகற்றக்கோரி அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதை கண்டித்தும், அந்த கடையை மூடக்கோரியும் நேற்று காலை அந்த கடையின் எதிரே தரையில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சு வார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசார் மற்றும் துணை தாசில்தார் திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார் அவர்களிடம், இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்த கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story