மாரியம்மன், சிறைமீட்ட அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்


மாரியம்மன், சிறைமீட்ட அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 2 Jun 2017 4:00 AM IST (Updated: 2 Jun 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

துறைமங்கலம், அம்பா பூரில் உள்ள மாரியம்மன், சிறைமீட்ட அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் துறைமங்கலம் அவ்வையார் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூப்பனார் பாட்டன் உள்பட பரிவார தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமானங்களின் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் விநாயகர் வழிபாடு முதற்கால யாக சாலை பூஜை, 2-ம் கால யாக சாலை பூஜை நடை பெற்றது.

கும்பாபிஷேகம்

இதையடுத்து காலை 8.30 மணியளவில் கலசம் புறப்பாடு நடைபெற்றது. அதை தொடர்ந்து வாணவேடிக்கை, நாதஸ்வர இசையுடன் சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்திருந்த கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் பரிவார தெய்வங்களான மூப்பனார் பாட்டன் சுவாமிகள் மூலஸ்தான விமானத்திற்கு முதலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க மாரியம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு மாரியம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) குடிவிடுதல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.

சிறைமீட்ட அய்யனார் கோவில்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்துள்ள அம்பாபூர் கிராமம் வடக்கு பனந்தோப்புகாட்டில் பூர்ண புஷ்டகளாம்பிகா சமேத சிறைமீட்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முதற்கால யாக சாலை பூஜை, விநாயகர் வழிபாடு, புண்யாவாகனம், வாஸ்துசாந்தி, பூர்ணாகுதி நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாக சாலை பூஜை, யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது. தொடர்ந்து மங்கள இசை மூன்றாம் கால யாக பூஜை, சுவாமிகள் கண்திறப்பு, அபிஷேக அலங்கார ஆராதனையுடன், பூர்ணாகுதி நடை பெற்றது.

அதை தொடர்ந்து காலை 8 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க பூர்ண புஷ்டகளாம்பிகா சமேத சிறைமீட்ட அய்யனார் சாமிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் விக்கிரமங்கலம், ஆலவாய், அம்பாபூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story