வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய 4 பேரை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சியில் கோவில் திருவிழாவின் போது வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய 4 பேரை பொது மக்கள் பிடித்து வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனத்தையும் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மலைக்கோட்டை,
திருச்சி மேலசிந்தாமணி பழைய கரூர் ரோட்டில் சஞ்சய் காந்தி நகர் பகுதியில் நாடார் தெரு உள்ளது. இங்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 45 வருடங்களுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இந்த தெருவில் கடந்த சில வருடங்களாக சேலத்தை சேர்ந்த சின்னசாமி என்பவருக்கும், தெரு வாசிகளுக்கும் இடையே குடியிருக்கும் இடம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வருகிறது.
இது சம்பந்தமாக ஏற்கனவே இரண்டு தரப்பினர் சார்பிலும் கோட்டை போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டதில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் திருச்சி கோர்ட்டிலும் இது சம்பந்தமாக வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாடார் தெருவில் கடந்த 3 நாட்களாக காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.நேற்று காலை விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனால் தெருவில் உள்ள அனைவரும் காவிரி ஆற்றில் உள்ள அய்யாளம்மன் கோவில் படித்துறைக்கு சென்று விட்டனர்.
பெண்ணிடம் அத்துமீறல்
அப்போது அந்த தெருவில் தனியாக இருந்த அருணாச்சலம் மனைவி ராஜேஸ்வரி (வயது 37)யிடம் சேலத்தை சேர்ந்த சின்னசாமி, ராஜேந்திரன், சித்ரமணி, சக்திவேல் ஆகிய 4 பேர் இடத்தை அளக்க வேண்டும் என்று கூறி தகாத வார்த்தைகளால் பேசி, அவரது சேலையையும், ஜாக்கெட்டையும் கிழித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் தெரிந்த தெரு பொதுமக்கள் அனைவரும் உடனடியாக ஒன்று சேர்ந்து அந்த 4 பேரையும் பிடித்து வைத்துக்கொண்டு கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாச பெருமாள், இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இரு தரப்பினரும் புகார்
கோட்டாட்சியர் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள் யாரும் அத்து மீறி உள்ளே வரக்கூடாது. இந்த இடம் சம்பந்தமாக பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கூறினர். இதை யடுத்து கோட்டாட்சியர் ராஜ்குமார், திருச்சி கிழக்கு தாசில்தார் சத்தியமூர்த்தி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதே போன்று எதிர் தரப்பைச் சேர்ந்த சின்னசாமியும் ஒரு புகார் கொடுத்துள்ளார். இந்த இரண்டு புகார்கள் குறித்தும் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகனத்தை மறித்தனர்
இந்த போராட்டத்தின் போது சின்னசாமி உள்ளிட்ட நான்கு பேரையும் போலீசார் மீட்டு பெட்ரோல் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேச்சு வார்த்தை முடிவதற்குள் அவர்களை போக அனுமதிக்காமல் வாகனத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story