ரூ.1.46 கோடி செலவில் 1,723 மீட்டர் வரை சதுரகிரி கோவிலுக்கு செல்ல நடைபாதை அமைப்பு


ரூ.1.46 கோடி செலவில் 1,723 மீட்டர் வரை சதுரகிரி கோவிலுக்கு செல்ல நடைபாதை அமைப்பு
x
தினத்தந்தி 2 Jun 2017 4:00 AM IST (Updated: 2 Jun 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல ரூ.1.46 கோடி செலவில் 1,723 மீட்டர் வரை நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

சதுரகிரி மலையில் சுற்றுலாத் துறையும், வனத்துறையும் இணைந்து ரூ.889.5 லட்சம் மதிப்பில் வழிகள் சமன்படுத்தி கிரானைட் பதித்து, மழைநீர் செல்லும் இடங்களில் சிறு பாலங்கள் அமைத்து பக்தர்கள் சிரமமின்றி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்று வர நடைபாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரூ.1.46 கோடி செலவில் தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து 1,723 மீட்டர் வரை நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாணிப்பாறை அடிவாரப் பகுதியிலிருந்து கோவில் சுமார் 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நடைபாதை தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து வன உயிரினச் சரணாலய பகுதியில் 4.75 கி.மீ தூரத்திற்கு செல்கிறது. இதுதவிர தாணிப்பாறை நுழைவு வாயிலை ஒட்டி உயிர்பண்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் இயற்கை விளக்க மையம் கட்டி முடிக்கப்பட்டு வனம் மற்றும் உயிரினம் தொடர்பான காட்சி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 10 நபர்களைக் கொண்ட சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு தாணிப்பாறையிலிருந்து சதுரகிரி கோவில் வரையிலும் இரு புறங்களிலும் நடைபாதையில் பக்தர்கள் விட்டுச்சென்ற குப்பைகளை தொடர்ந்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விலக்கு

சாப்டூர் ஒதுக்குக்காட்டின் அறிவிக்கையின்படி இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான சந்தன மகாலிங்்கம் கோவிலுக்கு சுமார் 10 ஏக்கர் நிலமும் சுந்தரமகாலிங்்கம் கோவிலுக்கு 63.76 ஏக்கர் நிலமும் ஆக மொத்தம் 73.76 ஏக்கர் நிலம் ஒதுக்குக் காட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.


Next Story