இறைச்சிக்காக கால்நடைகளை விற்க தடை சட்டம்; மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்
இறைச்சிக்காக கால் நடைகளை விற்க தடை விதித்து கொண்டுவரப்பட்ட சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று ஜி.கே.வாசன் பேட்டி அளித்தார்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் நடந்த த.மா.கா. இளைஞரணி மாவட்ட தலைவர் முகேஷ்குமார் திருமண விழாவில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும். கலால் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்கவேண்டும். இதன் விலை நிர்ணயத்தை மத்திய அரசு ஏற்கவேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு விதியை பின்பற்றி கட்டப்படாத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுவதை தடை சட்டம், இறைச்சிக்காக கால்நடைகளை விற்க தடை ஆகியவற்றுக்கு மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு தடை விதித்து இருப்பது சரியான தீர்ப்பு. இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.
இதற்கு குரல் கொடுத்த ஐ.ஐ.டி. மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தவேண்டும். மீனவர்கள் பிரச்சினை தொடர் கதையாக உள்ளது. இலங்கை கடற்படை தொடர்ந்து மீனவர்களை தாக்குவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும். பிரதமர் இலங்கை சென்றபோது இலங்கை பிரச்சினை பற்றி பேசி தீர்வு கிடைக்கும் என்று மீனவர்கள் நினைத்து இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. 146 படகுகள், 11 இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது. மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மீனவர்களின் பாரம்பரிய உரிமையை நிலைநாட்டவேண்டும்.
நிவாரண தொகை
மீன்பிடி தடைகாலம் 61 நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான நிவாரண தொகையை அரசு உடனே வழங்கவேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர் ஆதாரம் குறைந்துள்ளது. ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். பாம்பன் பாலத்தில் சமீபகாலமாக விபத்துகள் அதிகமாக நடந்துவருகிறது. பாலத்தில் மின்விளக்குகள் எரிவதில்லை.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பாலத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வேக கட்டுப்பாடு அறிவித்து கேமராமூலம் கண்காணிக்கவேண்டும். வேக கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும்.
பாம்பன் பாலத்தின் உறுதிதன்மையை ஆய்வு செய்யவேண்டும். 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளின் கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஜி.கே.வாசனை சந்தித்து மீனவர்கள் தங்கள் கோரிக்கையை தெரிவித்தனர். அப்போது உடன் மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மேற்கு மாவட்ட தலைவர் சோபா ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் நாகராஜ் உள்பட கட்சியினர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story