ராமேசுவரம் ரத வீதியில் முன்னாள் முதல்-மந்திரி வாகனத்துக்கு அனுமதி மறுப்பு

ராமேசுவரம்,
கோவா மாநில முன்னாள் முதல்-மந்திரி லட்சுமிகாந்த்வர்சேகர் நேற்று ராமேசுவரம் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்செய்ய வருகை தந்தார். அவரை பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன், நகர் தலைவர் ஸ்ரீதர், பொதுச்செயலாளர் நம்புராஜன், நிர்வாகி முத்துச்செல்வம் மற்றும் கட்சியினர் வரவேற்றனர். கோவில் ரதவீதியில் சில முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில் கோவா முன்னாள் முதல்-மந்திரி வாகனத்தில் செல்ல முயன்றபோது போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். பின்னர் அவர், குடும்பத்துடன் கோவிலுக்கு நடந்து சென்று சாமிதரிசனம் செய்தார். பின்னர்கோசுவாமி மடத்தில் நடந்த ராமாயண கதை சொல்லும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- புனித தலமான ராமேசுவரம் கோவிலில் சாமி, அம்பாளை தரிசனம் செய்தது மனநிறைவாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ஒருமுறையாவது ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போது தான் பிறந்த பயனை அடையமுடியும். ராமேசுவரத்தை புனித தீவாகவும், சுற்றுலா தலமாகவும் அறிவித்து மத்திய, மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி பல்வேறு வளர்ச்சிகளையும் வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story