ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் ‘நாப்கின்’களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்
‘‘ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் ‘நாப்கின்’களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’’ என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் வலியுறுத்தினார்.
மும்பை,
‘‘ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் ‘நாப்கின்’களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’’ என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் வலியுறுத்தினார்.
அமிதாப்பச்சன்முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ், தனியார் வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பதவி வகிக்கிறார். அத்துடன் இசை மீதும் அவருக்கு அலாதி பிரியம் உண்டு. நடிகர் அமிதாப்பச்சனுடன் சேர்ந்து சமீபத்தில் ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார். இதில், அமிதாப்பச்சனும், அம்ருதா பட்னாவிசும் இணைந்து நடனம் ஆடியிருக்கின்றனர்.
இந்தநிலையில் இந்த ஆல்பம் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப்பச்சன், அம்ருதா பட்னாவிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, அம்ருதா பட்னாவிஸ் பேசியதாவது:–
‘நாப்கின்’களுக்கு விலக்குசுய உதவிக்குழுவினர் தயார் செய்யும், முத்திரை குத்தப்படாத ‘நாப்கின்’களுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் கருதுகிறேன். அமிதாப்பச்சனுடன் இணைந்து நடனம் ஆடுவது என்னுடைய நீண்டகால கனவு. ஆனால், அவர் முன்பாக நான் நின்றதும், எனக்கு பதற்றம் ஏற்பட்டது.
அப்போது, அவர் என்னை ஒரு தோழியாக நடத்தினார். தான் ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற உணர்வே இல்லாமல் பழகினார். என்னுடைய கணவருக்கும் இந்த இசையும், பாடலும் மிகவும் பிடித்தது. அவர் அமிதாப்பச்சனின் தீவிர ரசிகர். அதனால், ஒட்டுமொத்த வீடியோவும் அவருக்கு பிடித்து போய்விட்டது.
இவ்வாறு அம்ருதா பட்னாவிஸ் கூறினார்.
அம்ருதா திறமைசாலிநடிகர் அமிதாப்பச்சன் கூறும்போது, ‘‘இந்த ஆல்பம் தொடர்பாக அம்ருதா பட்னாவிஸ் என்னை தொடர்பு கொண்டதும், உடனடியாக ஒப்புக்கொண்டேன்.
அவர் முதல்–மந்திரியின் மனைவி என்பதற்காக அல்ல, நல்ல திறமைசாலி என்பதற்காக ஒப்புக்கொண்டேன்’’ என்றார்.