பணகுடி அருகே தொழிலாளி கொலையில் பெண் உள்பட 7 பேர் கைது


பணகுடி அருகே தொழிலாளி கொலையில் பெண் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 3 Jun 2017 1:45 AM IST (Updated: 2 Jun 2017 6:50 PM IST)
t-max-icont-min-icon

பணகுடி அருகே தொழிலாளி கொலையில் பெண் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

பணகுடி,

பணகுடி அருகே தொழிலாளி கொலையில் பெண் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொலை வழக்காக மாற்றம்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள நெரிஞ்சி காலனியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது. விழாவின் போது அதே ஊரைச் சேர்ந்த சேகர், முகேஷ் ஆகியோர் சாமியாடினர். அப்போது சேகரின் உறவினரான குமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்த முருகேசன் என்பவரும் சாமியாடியுள்ளார். இதனை நெரிஞ்சி காலனியை சேர்ந்த ஜார்ஜ், அவருடைய தம்பி மனோகரன் உள்ளிட்டவர்கள் தட்டிக் கேட்டனர்.

அப்போது சேகர் தரப்புக்கும், ஜார்ஜ் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சேகர், முகேஷ், முருகேசன் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். மேலும் கோவில் திருவிழாவை பார்க்க வந்த பக்கத்து ஊரான கரையடிகாலனியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி ராஜா என்பவரும் காயம் அடைந்தார். காயம் அடைந்த அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் ராஜா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

7 பேர் கைது

இதுதொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நெரிஞ்சி காலனியை சேர்ந்த ஜார்ஜ், அவருடைய மனைவி ராணி, மகன் ஸ்டாலின், ஜார்ஜின் தம்பி மனோகரன், அவருடைய மகன் சந்தனகுமார், கிருஷ்ணன் மகன் விஜய் (20), தேவதாஸ் மகன் செல்வின் (19) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story