மாட்டு இறைச்சிக்கு விதித்த தடையை வாபஸ் பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் ரெயில் மறியலுக்கு முயன்ற 13 பேர் கைது
மாட்டு இறைச்சிக்கு விதித்த தடையை வாபஸ் பெற வலியுறுத்தி, கோவில்பட்டியில் ரெயில் மறியலுக்கு முயன்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர்
கோவில்பட்டி,
மாட்டு இறைச்சிக்கு விதித்த தடையை வாபஸ் பெற வலியுறுத்தி, கோவில்பட்டியில் ரெயில் மறியலுக்கு முயன்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெயில் மறியலுக்கு முயற்சி
மத்திய அரசு மாட்டு இறைச்சிக்கு விதித்த தடையை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, ஆதி தமிழர் கட்சி சார்பில், கோவில்பட்டியில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நேற்று காலை ஆதி தமிழர் கட்சியினர் கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு வந்தனர். காலை 11.45 மணி அளவில் நாகர்கோவில்– கோவை பாசஞ்சர் ரெயில், கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது. உடனே ஆதி தமிழர் கட்சியினர் அந்த ரெயிலை மறிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், கிழக்கு இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
13 பேர் கைது
பின்னர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் ஆதி தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ரெயில் மறியலுக்கு முயன்றதாக மாநில துணை செயலாளர் கண்ணன், தென் மண்டல தலைவர் திலீபன், செயலாளர் மனோகர், மாவட்ட அமைப்பு செயலாளர் சேகர், துணை செயலாளர் முத்துசாமி உள்பட ஆதி தமிழர் கட்சியினர் 13 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஆர்ப்பாட்டம்
இதேபோல், மத்திய அரசு மாட்டு இறைச்சிக்கு விதித்த தடையை வாபஸ் பெற வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார்.
மாநில துணை பொதுச்செயலாளர் கலைவேந்தன், மாவட்ட பொருளாளர் சமுத்திரபாண்டியன், வக்கீல் அணி அமைப்பாளர் பெஞ்சமின் பிராங்ளின், துணை செயலாளர் மோகன், தொகுதி செயலாளர் முருகன், செய்தி தொடர்பாளர் மனுவேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story