பெரம்பலூருக்கு ஓ.பன்னீர்செல்வம் இன்று வருகை
முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (சனிக்கிழமை) இரவு பெரம்பலூருக்கு வருகை தருகிறார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி அளவில் துறையூர் சாலையில் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி எதிரே புதிதாக கட்டப்பட்டுள்ள கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினரும், பெரம்பலூர் எம்.பி.யுமான மருதராஜா இல்லத்தை திறந்து வைக்கிறார். விழாவில் கழக அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனிசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், மாநிலங்கள் அவை எம்.பி. டாக்டர் மைத்ரேயன், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, மா.பா பாண்டியராஜன், மாநில வழக்கறிஞர் பிரிவு மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவிற்கு வருகை தரும் முன்னாள் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்க பெரம்பலூர், அரியலூர் மாவட்டம் மற்றும் பாராளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து கழக நிர்வாகிகளும், கழக செயல்வீரர்களும் திரளாக வருகை தருமாறு மருதராஜா எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.