திருமங்கலத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் தள்ளு முள்ளு


திருமங்கலத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் தள்ளு முள்ளு
x
தினத்தந்தி 3 Jun 2017 3:30 AM IST (Updated: 3 Jun 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது கலெக்டர் கூட்டத்தினரை அமைதிப்படுத்தி மனுக்களை பெற்றார்.

திருமங்கலம்,

திருமங்கலம் தாலுகாவில் உள்ள 7 உள்வட்டங்களில் உள்ள 108 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி கடந்த 24–ந்தேதி தொடங்கியது. தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் வீரராகவராவ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றும் கிராம கணக்குகள் மற்றும் நில அளவை கருவிகளை ஆய்வு செய்தார். பின்னர் ஜமாபந்தி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

நிறைவு நாளான நேற்று திருமங்கலம் உள்வட்டத்தில் உள்ள 17 கிராமங்களுக்கான மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் கலெக்டர் கலந்து கொண்டு மனுக்களை பெற்று ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்பட பொதுவான கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கொடுக்க வந்திருந்த ஏராளமான கிராமமக்கள் முண்டியடித்து கொண்டு நின்றிருந்தனர்.

அந்த கூட்டத்தை ஒரு போலீஸ்காரர் மட்டும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது சிலர் முந்தி செல்ல முயன்றனர். அதில் வரிசையில் நின்றிருந்தவர்களுக்கும், முந்தி சென்றவர்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை.

மனுக்கள்

இதைப்பார்த்த கலெக்டர் அறையை விட்டு வெளியில் வந்து கூட்டத்தை அமைதிப்படுத்தி, வரிசையாக வருமாறு கூறி கிராமமக்களிடம் மனுக்களை பெற்றார். இதனால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் திருமங்கலம் ஒன்றியம் நடுக்கோட்டை கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:– 1986–ல் கட்டப்பட்ட மேல்நிலைத்தொட்டி மூலம் நடுக்கோட்டை மற்றும் கிரியகவுண்டன்பட்டி கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. எனவே கூடுதல் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் சம்பந்தபட்ட அதிகாரிக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வாடிப்பட்டி

வாடிப்பட்டி தாலூகாவில் உள்ள உள்வட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 24–ந்தேதி தொடங்கியது. இதில் வருவாய் கோட்டாட்சியர், தனி துணை கலெக்டர் (நிலம்) பழனிக்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினா.

முதல் நாள் தென்கரை, மறுநாள் சோழவந்தான் என தொடர்ந்து தனிச்சியம் அலங்காநல்லூ£, பாலமேடு, முடுவா£பட்டி, நீரேத்தான் உள்வட்டங்களுக்கும், டி.ஆண்டிபட்டி, தும்பிச்சாம்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, கட்டக்குளம், நீரேத்தான், தாதம்பட்டி, ஜா£ விராலிப்பட்டி, குலசேகரன்கோட்டை, கச்சைகட்டி, போடிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களுக்கும் அடுத்தடுத்த நாட்களில் ஜமாபந்தி நடந்தது.

இதில் முதியோ£, விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, பட்டாமாறுதல், பட்டா உட்பி£வு என்று ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன. இதில் துணைதாசில்தா£கள், சாவேயாகள், கிராமநி£வாக அதிகா£கள், கிராமஉதவியாளாகள் உள்பட பலா கலந்து கொண்டனா.


Next Story