இருவேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
இருவேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பாண்டூரை சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் சுபாஷினி (வயது 12), இவர் பாண்டூரில் உள்ள பள்ளி ஒன்றில் 6–ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சுபாஷினி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சுபாஷினிக்கு வயிற்றுவலி குணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சுபாஷினிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாத அவர் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்பேரம்பாக்கம் அருகே உள்ள பண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி விஜயா(45). இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை. நேற்று முன்தினம் மீண்டும் விஜயாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. வலிதாங்க முடியாத அவர் தன்னுடைய வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.