மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு


மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 3 Jun 2017 3:30 AM IST (Updated: 3 Jun 2017 2:04 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தை அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் துரை. அவரது மகன் முத்துவேல் (வயது 26). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

உத்திரமேரூர்,

நேற்று முன்தினம் இவரது வயலில் உள்ள மின்மோட்டார் பழுதானது. அதை அவர் இரவு முழுவதும் இருந்து மெக்கானிக்கை வைத்து சரி செய்தார். இந்தநிலையில் நேற்று காலை மின் மோட்டாரை இயக்க முத்துவேல் சுவிட்ச்சை போட்டார். அப்போது மின்மோட்டார் இயங்கவில்லை. அதை சரி செய்ய முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றுவதற்காக விரைந்து வந்தனர். அதற்குள் முத்துவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாலவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story