கரூரில் மாட்டிறைச்சியை தின்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கரூரில் மாட்டிறைச்சியை தின்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2017 3:45 AM IST (Updated: 3 Jun 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் மாட்டிறைச்சியை தின்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்,

இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க தடை விதித்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கரூரில் ஆர்.எம்.எஸ். தபால் நிலைய அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.மாட்டிறைச்சியை தின்று...

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலர் மாட்டிறைச்சியை தின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழ் புலிகள் அமைப்புகள் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் முகில் அரசன் தலைமையில் நிர்வாகிகள் மாட்டிறைச்சியை தின்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரெயில் நிலையம்

இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆதி தமிழர் பேரவையினர் கரூர் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட போவதாக தகவல் வந்தது. இதைதொடர்ந்து கரூர் ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பு பாதுகாப்பு பணியை அதிகப்படுத்தினர்.

ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பு போலீசார் தடுப்புகள் அமைத்திருந்தனர். ஆனால் போராட்டம் நடத்த யாரும் வரவில்லை. இதையடுத்து போலீசார் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story