வெளிப்பக்கமாக கதவை உறவினர்கள் பூட்டியதால் கள்ளக்காதலியின் வீட்டில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை 5 பேர் கைது


வெளிப்பக்கமாக கதவை உறவினர்கள் பூட்டியதால் கள்ளக்காதலியின் வீட்டில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை 5 பேர் கைது
x
தினத்தந்தி 3 Jun 2017 5:30 AM IST (Updated: 3 Jun 2017 4:36 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே வெளிப்பக்கமாக கதவை உறவினர்கள் பூட்டியதால் கள்ளக்காதலியின் வீட்டில்

சூளகிரி,

 டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவருடைய கள்ளக்காதலி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

அரசு பஸ் டிரைவர்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த மாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 36) அரசு டவுன் பஸ் டிரைவரான இவர், கடந்த மாதம், 15–ந் தேதி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, கோபசந்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக சூளகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 27–ந் தேதி குமரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சூளகிரி அடுத்த பெத்தசிகரலப்பள்ளியில் உள்ள தன் கள்ளக்காதலியான ஜெயப்பாவின் மனைவி சாரதா (40) என்பவரின் வீட்டிற்கு குமரேசன் சென்றார். இதை அறிந்த ஜெயப்பாவின் தம்பிகள் மற்றும் உறவினர்கள் நேற்று அதிகாலையில் அங்கு சென்று சாரதாவை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்ததுடன், குமரேசனை தனியாக வீட்டில் வைத்து கதவை வெளிப்பக்கமாக பூட்டினார்கள்.

தூக்குப்போட்டு தற்கொலை

மேலும் நடந்த சம்பவத்தை குமரேசனின் உறவினர்களிடமும், பொதுமக்களிடமும் தெரிவிப்பதாக கூறினார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த குமரேசன், அவனமானம் தாங்க முடியாமல் கள்ளக்காதலி வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் குமரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தற்கொலைக்கு தூண்டியதாக பெத்தசிகரலப்பள்ளியை சேர்ந்த சதீஷ் (25), செக்கண்ணா (27), ஜபீர் (23), முனிகிருஷ்ணன் (25) மற்றும் கள்ளக்காதலி சாரதா (40) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story