தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு கலெக்டர் தகவல்
குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
நாகர்கோவில்,
குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழக அரசின் தொழிற்பயிற்சி நிலையங்களில் பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரிசன், வயர்மேன், மோட்டார் மெக்கானிக், டிராப்ட்மேன் சிவில், வெல்டர், மெக்கானிக் டீசல், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டெய்லர் ஆகிய தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 30 ஆயிரம் சேர்க்கைக்கான இடங்கள் காலியாக உள்ளன.
இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 31–5–2017–க்குள் வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 15–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்கள் தமிழகத்தின் எந்த ஒரு தொழிற்பயிற்சி நிலையத்திலும் சேரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.