அறந்தாங்கியில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்


அறந்தாங்கியில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2017 1:29 AM IST (Updated: 4 Jun 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கியில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்

அறந்தாங்கி,

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் அறந்தாங்கி வட்டக்கிளைக் கூட்டம் அறந்தாங்கியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அப்பாத்துரை தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஜெகன்நாதன், செயலாளர் ஆழ்வாரப்பன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதிகளில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சுப்பிரமணியன் வரவேற்றார். முடிவில் நம்பிராஜன் நன்றி கூறினார். 

Next Story