இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கிராமப்புற கோவில்களுக்கு பூஜை பொருட்கள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்


இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கிராமப்புற கோவில்களுக்கு பூஜை பொருட்கள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்
x
தினத்தந்தி 4 Jun 2017 3:45 AM IST (Updated: 4 Jun 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கிராமப்புற கோவில்களுக்கு பூஜை பொருட்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கும் விழா தர்மபுரி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா வரவேற்று பேசினார். கோவில் ஆய்வாளர்கள் சத்யா, சங்கர், கோவிந்தராஜ், செயல் அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 187 கிராமப்புற கோவில்களுக்கு தலா ரூ.2,500 மதிப்புள்ள பித்தளை தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு மற்றும் தொங்குவிளக்கு ஆகிய பூஜை பொருட்களை வழங்கினார். மொத்தம் ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 500 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.
விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

அடிப்படை வசதிகள்

2016-2017-ம் ஆண்டில் 10 ஆயிரம் கிராமப்புற கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு பூம்புகார் நிறுவனம் மூலம் இந்த பூஜை பொருட்கள் தயாரிக்கப்பட்டு கோவில்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் தினமும் சாமிக்கு வழிபாடுகள் நடத்தப்படும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க இந்த அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில் உதவி கலெக்டர் ராமமூர்த்தி, கூட்டுறவு பணியாளர் சங்க தலைவர் பழனிச்சாமி, கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரெங்கநாதன், கூட்டுறவு நிலவளவங்கி தலைவர் ரவி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முருகன், ஆவின்துணைத்தலைவர் பெரியசாமி, கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் கோவிந்தசாமி, அக்ரோ துணைத்தலைவர் பெருமாள், நிர்வாகிகள் நல்லத்தம்பி, சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், அரூர் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Next Story