தூத்துக்குடி மாவட்டத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா


தூத்துக்குடி மாவட்டத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 4 Jun 2017 4:00 AM IST (Updated: 4 Jun 2017 1:43 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி,

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திரேஸ்புரம் பகுதி செயலாளர் தொம்மை ஜேசுவடியான் தலைமையில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி தங்கம் ‘கேக்‘ வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி தமிழரசன் படிப்பகத்தில் நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த விழாவுக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, இலக்கிய அணி அமைப்பாளர் சோழபெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், மாணவர் அணி துணை அமைப்பாளர் கணேசன், மயில் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர் கேக் வெட்டி, அனைவருக்கும் வழங்கினார். நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் சேதுரத்தினம், ஒன்றிய அவை தலைவர் பொன்னுசாமி, ஒன்றிய துணை செயலாளர் தங்கபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடன்குடி

உடன்குடியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலசிங் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நகர செயலாளர் ஜான் பாஸ்கர், முன்னாள் நகர செயலாளர் கனகலிங்கம், பஞ்சாயத்து செயலாளர்கள் இளங்கோ, கனகராஜ், முருகேசன், மாவட்ட பிரதிநிதி ஹரிகிருஷ்ணன், நகர பொருளாளர் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எட்டயபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் பாரதி கணேசன் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. மாவட்ட பிரதிநிதிகள் பரமசிவம், கல்லடி வீரன், நகர அவை தலைவர் அங்கமுத்து, நெசவாளர் அணி பிச்சை, இளைஞர் அணி குமார், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூரில் தி.மு.க. மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல் கட்சி கொடியேற்றினார். ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நகர செயலாளர் மந்திரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி தங்கத்துரை, முன்னாள் நகர செயலாளர்கள் ராஜபாண்டி, ராஜமோகன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஷ், வக்கீல் அணி சாத்ராக், முன்னாள் கவுன்சிலர்கள் சுதாகர், கோமதிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆழ்வார்திருநகரி

ஆழ்வார்திருநகரியில் தி.மு.க. நகர செயலாளர் முத்துராமலிங்கம் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் முத்துபாண்டி, வெயிலுமுத்து, ஜெரால்டு, இளைஞர் அணி அமைப்பாளர் மணி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story