ஆர்.எஸ்.மடை ஊராட்சிக்கு உட்பட்ட ஏந்தல் கண்மாயில் தூர்வாரும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
தாய் திட்டத்தின்கீழ் ஆர்.எஸ்.மடை ஊராட்சிக்கு உட்பட்ட ஏந்தல் கண்மாய் தூர்வாரும் பணியை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் யூனியன் ஆர்.எஸ்.மடை ஊராட்சிக்கு உட்பட்ட பால்கரை கிராமத்தில் தாய் திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் உள்ள கண்மாய்களை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் ஏந்தல் கண்மாயை தூர்வாரும் பணிகளை கலெக்டர் நடராஜன் தலைமையில் அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:– மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியை பின்பற்றி செயல்படும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் பொதுமக்களுக்கு சிரமமின்றி சென்றடையும் வகையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஊரக வளர்ச்சி துறையின் மூலம் ஊரக பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உத்தரவுஅந்தவகையில் கிராமங்களில் குடிநீர் வசதி, தெருவிளக்கு, சிமெண்டு சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி ஒவ்வொரு ஊராட்சிகளிலும் தன்னிறைவு பெற்ற கிராமமாக உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது ஊராட்சி ஒன்றிய பராமரிப்பில் உள்ள சிறுபாசன கண்மாய்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுஉள்ளது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016–17 நிதியாண்டில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.9.27 கோடி மதிப்பில் 42 சிறுபாசன கண்மாய்களை தூர்வாரவும், பாசன வசதிக்காக மடைகளை புனரமைப்பு செய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆர்.எஸ்.மடை ஊராட்சி பகுதியை சார்ந்த பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பால்கரை கிராமத்தில் உள்ள ஏந்தல் கண்மாயை தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது.
மண் படிவங்கள்மேலும் நீர் நிலைகளை ஆழப்படுத்தி எதிர்வரும் மழைக்காலத்தில் அதிகஅளவில் மழைநீரை சேமிக்க ஏதுவாகவும், கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் படிந்துள்ள வடிமண் படிவங்களை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 4,586 நீர்நிலைகளில் உள்ள களிமண் படிவங்களை எடுத்துக்கொள்ள அறிவிப்பு செய்யப்பட்டு தற்போது வரை 8,345 விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் நிலங்கள் இயற்கை வளம் நிறைந்ததாக மண்ணின் தன்மை மேம்படுவதோடு நீர்நிலைகளும் ஆழப்படுத்தப்பட்டு சீர்செய்யப்படுகிறது.
குடிமராமத்துஇதேபோல குடிமராமத்து திட்டப்பணிகளின் கீழ் பொதுமக்களின் 10 சதவீத பங்களிப்புடன் ரூ.1.48 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 19 கண்மாய்களை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 2017–18–ம் ஆண்டில் 800 பண்ணைக்குட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டு இதுவரை 319 பணிகள் நிறைவேற்றப்பட்டுஉள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், நீர்நிலைகளை மேம்படுத்தவும் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, ராம்கோ கூட்டுறவு தலைவர் முருகேசன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.