சிறுபான்மையின மக்களுக்கு சுயதொழில் தொடங்க கடன் வழங்கும் திட்டம்


சிறுபான்மையின மக்களுக்கு சுயதொழில் தொடங்க கடன் வழங்கும் திட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2017 4:00 AM IST (Updated: 4 Jun 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

சிறுபான்மையின மக்களுக்கு சுயதொழில் தொடங்க கடன் வழங்கும் திட்டம் கலெக்டர் தகவல்

தேனி,

சிறுபான்மையின மக்களுக்கு சுயதொழில் தொடங்க கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கடன் வழங்கும் திட்டம்

தேனி மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மக்களுக்கு சுயதொழில் செய்வதற்காக தொழிற்கடன் வழங்குவதற்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தொழிற்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், 18 வயது பூர்த்தியானவர்கள் முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை பயன்பெறலாம்.

கிராமப்புறத்தை சேர்ந்தவராக இருந்தால் ஆண்டு வருமானம் ரூ.98 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். நகர்ப்புறத்தை சேர்ந்தவராக இருந்தால் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

இதற்கான விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகம், பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் அந்தந்த அலுவலகங்களிலும் சமர்ப்பிக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் சிறுபான்மையின மக்கள் பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story