மகளுக்கு திருமணமான சில நாட்களில் திராவகம் குடித்து தொழிலாளி தற்கொலை
மகளுக்கு திருமணமான சில நாட்களில் திராவகம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரம்,
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே செருப்பாலூர் பாய்க்காடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 45), கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளுக்கு திருமணம் நடந்தது.
இந்தநிலையில், ரப்பர் பால் உறைய வைக்க பயன்படுத்தப்படும் திராவகத்தை குடித்து மணி தனது வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பரிதாப சாவு
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடன் தொல்லையால் மணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகளுக்கு திருமணமான சில நாட்களிலேயே தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story