விவசாய தேவைக்காக மண் எடுக்க அனுமதி: கல்லணை கால்வாயில் அதிகாரி ஆய்வு


விவசாய தேவைக்காக மண் எடுக்க அனுமதி: கல்லணை கால்வாயில் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 4 Jun 2017 3:14 AM IST (Updated: 4 Jun 2017 3:14 AM IST)
t-max-icont-min-icon

விவசாய தேவைக்காக மண் எடுக்க அரசு அனுமதி வழங்கி உள்ளதை தொடர்ந்து பட்டுக்கோட்டை பகுதியில் கல்லணை கால்வாயில் அதிகாரி செல்வராஜ் ஆய்வு செய்தார்.

பட்டுக்கோட்டை,

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண், சவுடு மண், களி மண் போன்றவற்றை விவசாயிகள், மண் பாண்ட தொழிலாளர்கள் தங்களுடைய தேவைக்காக இலவசமாக எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள கல்லணை கால்வாய் பாசன பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து கொள்ள மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை அனுமதி வழங்கினார்.

அதன்பேரில் பட்டுக்கோட்டை கல்லணை கால்வாய் பகுதியில் விவசாயிகள், மண் பாண்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான மண்ணை மாட்டு வண்டிகள் மூலமாக எடுத்து செல்கிறார்கள்.

ஆய்வு

இதை தஞ்சாவூர் கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் குறிச்சி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, மணவயல் கிராமத்தில் உள்ள கல்லாகுளம் ஏரி, பாலத்தளி கிராமத்தில் உள்ள பில்லங்குழி ஏரி ஆகியவற்றில் விவசாயிகள் மண் எடுப்பதை பார்வையிட்டார். அவருடன் செயற்பொறியாளர் ரேவதி, உதவி செயற் பொறியாளர் அன்பரசன், இளம் பொறியாளர் செல்லபாண்டியன், உதவி பொறியாளர் சுகன்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story