பிளேடால் வெட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை தம்பி கைது
அய்யம்பேட்டை அருகே பிளேடால் வெட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
அய்யம்பேட்டை,
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள புரசக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது55). இவர் வேம்பக்குடி ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். இவருடைய தம்பி இளையராஜா (45). கோயம்புத்தூரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்த இளையராஜா, தனது அண்ணன் சவுந்தர் ராஜனிடம் அடிக்கடி பணம் வாங்கி செல்வார் என கூறப் படுகிறது. அண்ணன்-தம்பி இடையே நிலப்பிரச்சினையும் இருந்து வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இளையராஜா ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அண்ணன்-தம்பி இடையே நிலம் தொடர்பாக தகராறு நடந்தது. இதில் ஆத்திரம் அடைந்த இளையராஜா தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் சவுந்தர்ராஜனின் வலது தோள்பட்டையில் வெட்டி, கீழே தள்ளினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சவுந்தர்ராஜனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சவுந்தர்ராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
கைது
இதுகுறித்து சவுந்தர்ராஜனின் மகன் அரவிந்தராஜா அய்யம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து இளைய ராஜாவை கைது செய்தனர். முன்னாள் ஊராட்சி தலைவரை அவருடைய தம்பியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story