மதுக்கடையில் ரூ.6 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு: 2 வாலிபர்கள் கைது
திருவாரூர் அருகே மதுக்கடையில் ரூ.6 லட்சம் மது பாட்டில் களை திருடியது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் அருகே உள்ள தப்பளாம்புலியூரில் இருந்து இலங்கைசேரி செல்லும் சாலையில் மதுக்கடை உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி இந்த மதுக்கடையின் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருவாரூர் இலவங்கார்குடி கீழத்தெருவை சேர்ந்த கருணாநிதி (வயது 58). இவர் நேற்றுமுன்தினம் காட்டூர் மதுக்கடை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். சுதாரித்து கொண்ட கருணாநிதி பொதுமக்கள் உதவியுடன் 2 பேரையும் பிடித்து திருவாரூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களிடம் நடத்தி விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
இதில் அவர்கள் திருவாரூர் சீராத்தோப்பு பகுதியை சேர்ந்த குமார் மகன் கண்ணன் (29), திருவாரூர் ரெயில்வே காலனியை சேர்ந்த கலியபெருமாள் மகன் பிரபாகரன் (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து, கருணாநிதியிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றதும் தெரிய வந்தது. மேலும், தப்பளாம்புலியூரில் மதுக்கடையை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுப்பாட்டில்களை திருடி சென்றது இவர்கள் தான் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து திருவாரூர் தாலுகா போலீசார் கண்ணன், பிரபாகரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Related Tags :
Next Story