இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய மாமியார்- மருமகன் கைது


இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய மாமியார்- மருமகன் கைது
x
தினத்தந்தி 4 Jun 2017 3:45 AM IST (Updated: 4 Jun 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

வீட்டை வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய மாமியார்- மருமகனை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக விபசார தடுப்புபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் அழகம்மாள் மற்றும் போலீசார் நேற்று பகல் அந்த வீட்டினுள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு 2 இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அந்த 2 பெண்களையும் திருப்பூரில் இருந்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த லட்சுமி என்கிற ஜெயலட்சுமி(வயது 45) அழைத்து வந்ததும் தெரியவந்தது.

மாமியார்-மருமகன் கைது

மேலும், திருவானைக்காவலில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம், மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருவதாகவும், மாதம் ரூ.4 ஆயிரம் வாடகை தருவதாகவும் கூறி ஜெயலட்சுமி அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த 2 மாதமாக விபசாரம் நடத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து ஜெயலட்சுமியையும்(45), அதற்கு உதவியாக இருந்த அவரது மருமகன் முகமதுஉசேனையும்(29) போலீசார் கைது செய்தனர்.

மேலும், அந்த வீட்டில் இருந்த 2 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஜெயலட்சுமி மீது ஏற்கனவே திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் விபசார வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story