ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினருக்கான கூடைப்பந்து போட்டி
ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினருக்கான கூடைப்பந்து போட்டியில் லக்னோ அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.
திருச்சி,
ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினருக்கான அகில இந்திய அளவிலான 30-வது கூடைப்பந்து போட்டி நேற்று முன்தினம் திருச்சி காஜாமலை ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படை மைதானத்தில் தொடங்கியது. இதில் திருச்சி, கோரக்பூர், லக்ே-்னா, செகந்திராபாத், மும்பை உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன.
லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடந்த இந்த போட்டியில், திருச்சி, கோரக்பூர், லக்னோ, செகந்திராபாத் ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. முதல் அரையிறுதி போட்டியில் கோரக்பூர் அணியும், லக்னோ அணியும் மோதின. இதில் லக்னோ அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் செகந்திராபாத் அணியை, திருச்சி அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
லக்னோ அணி சாம்பியன்
இதையடுத்து இறுதிப்போட்டியில் திருச்சி அணியும், லக்னோ அணியும் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 52-28 என்ற புள்ளி கணக்கில் லக்னோ அணி, திருச்சி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளராக திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி கலந்து கொண்டு லக்னோ அணிக்கு கோப்பையையும், வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். இதில் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படையின் சீனியர் கமாண்டிங் அதிகாரி அஷரப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story