வேனின் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்தது பெண்கள் உள்பட 32 தொழிலாளர்கள் காயம்


வேனின் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்தது பெண்கள் உள்பட 32 தொழிலாளர்கள் காயம்
x
தினத்தந்தி 4 Jun 2017 4:30 AM IST (Updated: 4 Jun 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

முசிறி அருகே, வேனின் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 32 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

முசிறி,

தா.பேட்டையில் தனியார் பஞ்சு மில் செயல்பட்டு வருகிறது. இதில் முசிறி, வெள்ளூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை வேலை முடிந்த பின் ஆண், பெண் தொழிலாளர்கள் அந்த மில்லுக்கு சொந்தமான வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தா.பேட்டையை சேர்ந்த சின்னசாமி வேனை ஓட்டினார்.

தா.பேட்டையிலிருந்து முசிறியை நோக்கி சென்ற அந்த வேன், தும்பலம் மெயின் சாலையில் சென்ற போது வேனின் பின் பக்க டயர் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் வேன் தாறுமாறாக ஓடி பக்கவாட்டில் கவிழ்ந்தது.

32 தொழிலாளர்கள் காயம்

இதில் வேனில் பயணம் செய்த முசிறியை சேர்ந்த வைத்தீஸ்வரன்(வயது25), ராஜா(37), மருதாம்பாள்(60), லலிதா(30), மஞ்சம்மாள்(28), வெள்ளூர் சாலப்பட்டியை சேர்ந்த கவுதமி(21), சேந்தமாங்குடியை சேர்ந்த ஜோதிமணி(23), தும்பலம் கீதா(33) என 27 பெண்கள் உள்பட 32 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்குப்பதிவு செய்து டிரைவர் சின்னசாமியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story