ரெயில் நிலையத்தில் கிடப்பில் போடப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம்
கரூர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணிகளை மீண்டும் தொடங்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்,
ரெயில்வேயில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ஸ்கேனர் கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. தெற்கு ரெயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மேலும் தெற்கு ரெயில்வேயில் பல ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் சேலம் கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட கரூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டன.
கட்டுப்பாட்டு அறை
கரூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இடங்களை தேர்வு செய்தனர். மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி, ஸ்கேனர் கருவி பொருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்கான கருத்துருக்கள் சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டன. மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை ரெயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் பயணிகள் காத்திருப்பு அறை அருகே அமைக்க திட்டமிடப்பட்டன.
கட்டுப்பாட்டு அறைகள் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வந்தது. அதன்பின் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பணிகள் எதுவும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டன.
34 இடங்கள்
இது குறித்து ரெயில்வே வட்டாரத்தில் விசாரித்தபோது அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “கரூர் ரெயில் நிலையத்தில் நுழைவு வாயில், ரெயில் நிலைய மேலாளர் அலுவலகம் அருகே மற்றும் 1 முதல் 5-வது நடைமேடைகள் வரை என மொத்தம் 34 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இடங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் அனுப்பப்பட்டு விட்டன. கட்டுப்பாட்டு அறைகளுக்கான கட்டுமான பணி தொடங்கி பாதியில் நின்றுவிட்டன. உயர் அதிகாரிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை” என்றனர்.
பயணிகள் தரப்பில் கூறுகையில், “கரூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் கூலித்தொழிலாளர்கள் முதல் பல்வேறு தரப்பை சேர்ந்த பயணிகளும் வந்து செல்கின்றனர். ரெயில் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறும்போது அதில் ஈடுபடுபவர்களை பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் அவசியமாகும். எனவே பாதுகாப்பு கருதி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்” என்றனர்.

Related Tags :
Next Story