டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்
வரதராஜன்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் கடை முன்பு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வரதராஜன்பேட்டை,
அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டையில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்தது. தேசிய, மாநில நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ஆண்டிமடம் சுற்றுப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. ஆனால் வரதராஜன்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடை மட்டும் இயங்கி வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 16-ந் தேதி வரதராஜன்பேட்டை பகுதியை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகளிடம் மனு
பேச்சுவார்த்தையையடுத்து போலீசார், எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று புகார் எழுதி மனுவாக மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் கலால் துறையினரிடம் கொடுங்கள் என்று கூறினர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் 15 பேர் கொண்ட குழு மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் கலால் துறையினரிடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆர்ப்பாட்டம்
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று இரண்டாவது தடவையாக டாஸ்மாக் கடை முன்பு ஒன்று சேர்ந்து, தாங்களே நிழலுக்கு பந்தல் அமைத்து கொண்டனர். பின்னர் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து அங்கு ஒரு பெண்ணை இறந்தது போல் படுக்க வைத்து அதை சுற்றி ஒப்பாரி வைத்து கடையை உடனடியாக மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடை முன்பு சமையல் செய்து சாப்பிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், சந்திரகலா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 4 மணி வரை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.

Related Tags :
Next Story